அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதிலாக ரூ.2000 ரொக்கம் மற்றும் இலவச வேட்டி சேலைகளை தமிழக அரசு வழங்கும் என்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தீபாவளி பண்டிகை நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தாக பொங்கல் பண்டிகையை தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்துள்ளனர். குறிப்பாக அப்போது தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்புக்கு இப்போதே மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இம்முறை பொங்கல் பண்டிகையின்போது பெண்களுக்கான மாதாந்திர மகளிர் உரிமைத் தொகையான ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பாக ஆயிரம் ரூபாய், அத்துடன் கருப்பு உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கும் என பெண்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை இன்னும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக அரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் 1,000 ரூபாய் ரொக்கமும் தமிழக அரசு சார்பில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடை வாடிக்கையாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதிலாக ரூபாய் 2000 ரொக்க பணம் மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Readmore: அசுர வேகத்தில் வந்த கார்..!! சாலையோரம் அமர்ந்திருந்தவர்கள் மீது மோதியதில் 5 பெண்கள் உயிரிழந்த சோகம்..!!