குற்றம் நடைபெறாமல் இருக்க சேலம் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் ஆடு வெட்டி பூஜை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏத்தாப்பூரில் காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆய்வாளராக குமரன், உதவி ஆய்வாளர் ஒருவர், 28 காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் காவல்நிலையத்தில் நாளுக்குநாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் இதனால், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில், ஆடு பலியிட்டு பூஜை செய்ததாகவும்.

அதன் ரத்தத்தை காவல் நிலைய நுழைவு வாயிலில் தெளிக்கப்பட்டு பூசணிக்காய் மற்றும் எலுமிச்சம் பழங்களை நறுக்கி வைத்தும், மஞ்சள், குங்குமங்களை வைத்து வழிப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: மரணத்திலும் கணவனை பிரியாத மனைவி!. அரை மணிநேரத்தில் உயிரைவிட்ட சோகம்!.