சின்னசேலம் அருகே கணவன் இறந்த துக்கத்தில் அரை மணிநேரத்திலேயே மனைவியும் உயிரைவிட்ட சம்பவம் சோகத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள காட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்வராயன் மகன் செல்லமுத்து(75). இவருக்கு ஏலக்கண்ணி(63) என்ற மனைவியும் ஒரு மகன் மூன்று மகள்கள் உள்ளன. அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். செல்லமுத்து கடந்த ஐந்து வருடங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு வீட்டில் கணவனும், மனைவியும் படுத்து தூங்கியுள்ளனர். பின்னர் இரவு 12 மணி அளவில் செல்லமுத்துவுக்கு திடீர் என மூச்சுத் திணறல் ஏற்பட்டு அதன் பிறகு உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி ஏலக்கண்ணி துக்கம் தாங்காமல் கதறி அழுது துடித்துள்ளார். பின்னர் திடீரென ஏலக்கண்ணியும் உயிரிழந்தார். இதனால் மகன், மகள்கள் மற்றும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Readmore: அலர்ட்!. உங்க அக்கவுண்டில் பணம் டெபாசிட் செய்வதற்கும் எடுப்பதற்கும் வரம்பு இதுதான்!. மீறினால் அபராதம்!.