தமிழக சட்டசபை டிச.9ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அந்த கூட்டத்தில் மகளிர் உரிமை தொகை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 9ம் தேதி கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு இன்று சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழக சட்டமன்ற பேரவை கூட்டம் வருகிற டிசம்பர் மாதம் 9ம் தேதி காலை 9.30 மணிக்கு தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூட்டி உள்ளேன். பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து, அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு எடுக்கும்.

அலுவல் ஆய்வு குழு கூடி, எத்தனை நாட்கள் கூட்டம் நடத்த வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டுமே தவிர, என் விருப்பத்துக்கு நான் 100 நாட்கள் கூட்டம் நடத்தப்போகிறேன் என்று சொல்ல முடியாது. அலுவல் ஆய்வு குழு கூட்டம் கூடி தான், சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்று சொல்ல வேண்டும். அந்த குழுவில், எல்லா கட்சி உறுப்பினர்களும் இருக்கிறார்கள்.

சட்டமன்ற கூட்டத்தொடரை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இப்போதுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்த பிறகுதான், நேரடி ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் டிசம்பர் 9ம் தேதி (திங்கள்) கூடி வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது..

பெண்களுக்கான உரிமைத் தொகை என்பது பெண்களுக்கு தமிழக அரசு கொடுக்கும் சிறப்பு நிதி ஆகும். தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக அரசு பணம் கொடுத்து உதவுகிறது. இந்நிலையில் தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி, பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை குறித்து விரைவில் சில முக்கிய தகவல் வெளியாகும் என்று கூறி வருகிறார். வரவிருக்கும் கூட்டத்தில், பெண்களுக்கு ஆதரவளிக்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதியவர்களை சேர்ப்பது மற்றும் அந்த திட்டத்தில் அதிக பெண்கள் சேருவதை எளிதாக்குவது பற்றி விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Readmore:பெற்றோர்களே உஷார்!. டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிட்ட குழந்தை!. மூச்சுத்திணறி உயிரிழந்த சோகம்!.