நாகை மாவட்டத்தில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், “பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து அனைத்து திட்டங்களையும் முதல்வர் நிறைவேற்றி வருகிறார். பெண்கள் உயர்கல்வி படிக்க முதல்வர் முக.ஸ்டாலின் கொண்டு வந்த புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளன.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை பொறுத்தவரை மாதந்தோறும் 1 கோடியே 16 லட்சம் மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் விடுபட்டவர்களில் தகுதியுள்ள பெண்கள் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தற்போது பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன” என்று பெருமிதம் தெரிவித்தார்.

இந்நிலையில்தான், தமிழ்நாட்டிலும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை மீண்டும் விரிவாக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், விரைவில் இதுகுறித்து அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Read More : நோட்!. ஆதார் பெயர் மாற்றம் உள்ளிட்ட விதிகளில் அதிரடி மாற்றம்!. இந்த பழைய சான்றுகள் கட்டாயம்!. முழுவிவரம் இதோ!.