தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் பொது விடுமுறை நாட்களை அறிவிக்கும். அந்த வகையில், தற்போது 2025ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியல் வெளியாகியுள்ளது. பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக் கிழமைகளுடன் பின்வரும் நாட்களும் 2025ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாக கருதப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை
ஜனவரி 1ஆம் தேதி (ஆங்கிலப் புத்தாண்டு) – புதன்கிழமை
ஜனவரி 14ஆம் தேதி (பொங்கல் பண்டிகை) – செவ்வாய்க் கிழமை
ஜனவரி 15ஆம் தேதி (திருவள்ளுவர் தினம்) – புதன் கிழமை
ஜனவரி 16ஆம் தேதி (உழவர் திருநாள்) – வியாழக் கிழமை
ஜனவரி 26ஆம் தேதி (குடியரசு தினம்) – ஞாயிற்றுக் கிழமை
பிப்ரவரி 11ஆம் தேதி (தைப்பூசம்) – செவ்வாய்க் கிழமை
மார்ச் 30ஆம் தேதி (தெலுங்கு வருடப் பிறப்பு) – ஞாயிற்றுக் கிழமை
மார்ச் 31ஆம் தேதி (ரம்ஜான் பண்டிகை) – திங்கள் கிழமை
ஏப்ரல் 1ஆம் தேதி (வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு) – செவ்வாய்க் கிழமை
ஏப்ரல் 10ஆம் தேதி (மகாவீரர் ஜெயந்தி) – வியாழக்கிழமை
ஏப்ரல் 14ஆம் தேதி (தமிழ் புத்தாண்டு / அம்பேத்கர் பிறந்த தினம்) – திங்கள் கிழமை
ஏப்ரல் 18ஆம் தேதி (புனித வெள்ளி) – வெள்ளிக் கிழமை
மே 1ஆம் தேதி (மே தினம்) – வியாழக்கிழமை
ஜூன் 7ஆம் தேதி (பக்ரீத் பண்டிகை) – சனிக்கிழமை
ஜூலை 6ஆம் தேதி (மொகரம்) – ஞாயிற்றுக் கிழமை
ஆகஸ்ட் 15ஆம் தேதி (சுதந்திர தினம்) – வெள்ளிக் கிழமை
ஆகஸ்ட் 16ஆம் தேதி (கிருஷ்ண ஜெயந்தி) – சனிக்கிழமை
ஆகஸ்ட் 27ஆம் தேதி (விநாயகர் சதுர்த்தி) – புதன் கிழமை
செப்டம்பர் 5ஆம் தேதி (மிலாதுன் நபி) – வெள்ளிக் கிழமை
அக்டோபர் 1ஆம் தேதி (ஆயுத பூஜை) – புதன் கிழமை
அக்டோபர் 2ஆம் தேதி (விஜயதசமி / காந்தி ஜெயந்தி) – வியாழக்கிழமை
அக்டோபர் 20ஆம் தேதி (தீபாவளி) – திங்கள் கிழமை
டிசம்பர் 25ஆம் தேதி (கிறிஸ்துமஸ்) – வியாழக் கிழமை
Read More :