கோயில் பணத்தை சூறை​யாடி வரும் இந்து சமய அறநிலையத் துறையை கலைத்துவிட வேண்​டும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்​னாள் ஐ.ஜி. பொன் மாணிக்க​வேல் ஆவேசமாக பேசியுள்ளார்.

சேலம் சுகவனேஸ்​வரர் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்த பொன்​.​மாணிக்க​வேல் செய்தி​யாளர்​களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அறநிலையத் துறை அமைச்சர் தொடங்கி அதிகாரிகள் வரை, மக்கள் வரிப் பணத்​திலிருந்து ஆண்டுக்கு ரூ.428 கோடி ஊதியம் வழங்​கப்​படு​கிறது. கோயில் கணக்​குகளை தணிக்கை பார்க்க ரூ.228 கோடி செலவிடப்​பட்​டுள்​ளது. தனி மனிதர் தவறு செய்​தால் தண்டிக்​கும் நிலை​யில், அரசே குற்றமிழைக்​கும்​போது என்ன செய்​வது? என்று கேள்வி எழுப்பினார்.

காவல் துறை மற்றும் முன்​னாள் ராணுவத்​தினரை இணைத்து கோயில் பாது​காப்பு படை உருவாக்​கப்​பட்​டது. ஆனாலும், 1022 உண்டியல் திருட்டு​கள், 248 கோயில்​களில் சிலைகள் திருட்டு நடந்​துள்ளன. 500-க்​கும் மேற்​பட்ட விக்​ரகங்கள் திருடு​போ​யுள்ளன. இதுவரை எந்த குற்​ற​மும் கண்டு​பிடிக்க​வில்லை. 2015 முதல் 2018 வரை கோயில் பாது​காப்பு படைக்கு ரூ.172 கோடி செலவு செய்​தும் எந்தப் பலனும் இல்லை என்று கூறினார்.

அறநிலையத் துறை கோயில் பணத்தை சூறை​யாடி வருகிறது. எனவே, உடனடியாக இந்து சமய அறநிலையத் துறையை கலைத்துவிட வேண்​டும். அறநிலையத் துறை அறமற்ற துறையாக உள்ளது.கோயில் பாது​காப்புப் படையில் தற்போது முன்​னாள் போலீ​ஸாரை சேர்க்​கிறார்​கள். அவர்கள் மது அருந்​தி​விட்டு பணியில் ஈடுபடு​கின்​றனர் என்று குற்றம்சாட்டினார்.

Readmore: நோட்!. வாக்காளர் பட்டியல் திருத்தம்!. தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம்!.