இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் 21ஆம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக 23ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக உருவாகுமா என்பதை வரும் நாள்களில்தான் உறுதியாகக் கூற முடியும். புயலாக உருவாகும் பட்சத்தில் தமிழகத்தை நோக்கி வருவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களைப் பொறுத்தவரையில் சனிக்கிழமை முதல் மழைப்பொழிவு இருக்கும்.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (19.11.2024) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று (19.112024) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Readmore: சேலத்தில் அதிர்ச்சி!. அதிக நேரம் வொர்க்அவுட்!. ஜிம் உரிமையாளர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!