நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து சரிந்து வந்த தங்கத்தின் விலை, கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து வருகிறது. தங்கம் வாங்கத் திட்டமிட்டு இருந்த பலரும் வேதனை அடைந்துள்ளனர். இந்த நிலையில் இப்போது தங்கத்தை வாங்கலாமா அல்லது காத்திருக்கலாமா என்ற குழப்பமும் மக்கள் மத்தியில் உள்ளது.

அந்தவகையில், நேற்று (நவம்பர் 18ஆம் தேதி) 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.60 அதிகரித்து, ரூ.6995க்கும், ஒரு சவரன் ரூ.480 அதிகரித்து ரூ. 55,960க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (நவம்பர் 19ஆம் தேதி) 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.70 அதிகரித்து, ரூ.7,065க்கும், ஒரு சவரன் ரூ.560 அதிகரித்து ரூ. 56,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 18 காரட் தங்கம், ஒரு கிராம் ரூ.60 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.5,830க்கும், ஒரு சவரன் ரூ.480 அதிகரித்து ரூ.46,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி ஒரு கிராம் ரூ.2 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.101க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Readmore: கல்லூரி மாணவியை சேலம் அழைத்துவந்த இளைஞர்!. வாடகை வீட்டில் வைத்து பலமுறை உல்லாசம்!. 2 மாத கர்ப்பம்!. பாய்ந்த வழக்கு!.