நாம் தமிழர் கட்சியில் இருந்து சேலம் மாநகர மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கம் விலகுவதாக அறிவித்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

கடந்த சில மாதங்களாக நாம் தமிழர் கட்சியில் இருந்து சில பொறுப்பாளர்கள் தொடர்ந்து விலகி வருகின்றனர். அந்தவகையில், கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர். மேலும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகினார். இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகினார். சீமான் தன்னிடம் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறியிருந்தார்

இதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் இருந்து விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் விலகினார். இவரை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து இளவஞ்சி விலகினார். கட்சி தலைமையின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை, பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை, புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதே இளவஞ்சியின் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து சேலம் மாநகர மாவட்ட செயலாளர் விலகுவதாக அறிவித்துள்ளார். சேலம் மாநகர மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கம் நாம் தமிழர் கட்சியில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது சீமான் உட்பட கட்சியினரிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Readmore: பெண்களே!. பிரசவத்துக்குப் பிறகு எடை அதிகரிக்கிறதா?. தடுப்பது எப்படி?.