கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு, நார்ச்சத்து, இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், தாமிரம், துத்தநாகம், செலினியம், மாங்கனீசு, தயாமின், வைட்டமின் B, A, E, K, கொழுப்பு அமிலங்கள் போன்ற சத்துக்கள் கிராம்பில் நிறைந்திருக்கின்றன. ஆண்டிஆக்சிடென்ட் ஏராளமாக உள்ளதால், எந்தவிதமான புற்றுநோய்களையும் நம்மை அண்ட விடுவதில்லை கிராம்புகள்.. சுவாச பிரச்சனைகளை முழுமையாக தீர்க்கக்கூடியது.

ஆஸ்துமா தொந்தரவு இருந்தாலும், கிராம்புவை மருந்தாக பயன்படுத்தலாம். கல்லீரல்: வெறும் வயிற்றில் தினமும் 2 கிராம்பு சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பலம் பெறுகிறது. கிராம்பிலுள்ள யூஜெனால், கல்லீரல் ஆரோக்கியத்தை காக்க செய்கிறது. வயிறு புண்கள், வாய்ப்புண்கள் இருந்தாலும் அதை கிராம்பு போக்கிவிடும்.. கிராம்பை மென்று தின்னும்போது வாய் துர்நாற்றமும் நீங்கும். ஜலதோஷம், சளிக்கு நிவாரணம் கிடைக்கும்.

எனினும், காலை நேரத்தைவிட, இரவில் தூங்குவதற்கு முன்பு 2 கிராம்பு சாப்பிட்டுவிட்டு, சுடுநீர் குடித்துவிட்டு படுத்தால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.. மலச்சிக்கல் இருந்தாலும் தீர்ந்துவிடும்.. வாயு, உப்புசம் பிரச்சனையும் விலகிவிடும். இதனால், குடல் ஆரோக்கியம் பெறுகிறது. முகப்பருக்கள் வராமல் இருக்கும்.

பற்களில் வலி, ஈறுகளில் வீக்கம், போன்றவைகளை கிராம்பு தீர்க்கக்கூடியது. ஏனென்றால், கிராம்பில் நுண்ணுயிரிகள் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் அது வாயில் இருக்கும் பாக்டீரியாக்களுடன் சண்டையிட்டு பற்சொத்தை மற்றும் ஈறு தொடர்பான நோய்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்க செய்கிறது. அதனால்தான் பல்தொடர்பான சில சிகிச்சைகளுக்கு கிராம்பு எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. காது வலி என்றாலும்கூட, இந்த 2 கிராம்பு மென்று விழுங்குவதே போதும்.

Readmore: உறுதியாகிறதா அதிமுக – தவெக கூட்டணி?. டீல் பேசிய விஜய்!. எடப்பாடி என்ன சொன்னார் தெரியுமா?