சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றுடன் காலை அல்லது மதியம் மழை பெய்யும். அதன்பிறகு ஒரு வாரத்துக்கும் மேலாக மழை பெய்யாது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, காஞ்சிபுரம், திருவாரூர், சென்னை, செங்கல்பட்டுக்கான இறுதிக்கட்ட மழை என்பது நவம்பர் 17 ம் தேதி காலை/மதியம் இருக்கும். அதன்பிறகு ஒருவாரத்துக்கு மேலாக மழை பிரேக் எடுக்கிறது. அதேவேளையில் டெல்டா மற்றம் தென் தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் மழை தொடரும். கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை), நாளை (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்களை பொறத்தவரை டெல்டா மற்றும் தென்தமிழகத்தில் மழை தொடரும். ஞாயிற்றுக்கிழமையில் (அதாவது இன்று) மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு மழை பெற உள்ளது.

மழைக்காலம் என்பது இன்னும் முடியவில்லை. இன்னும் மழைக்காலம் உள்ளது. எம்ஜேஓ காரணமாக இன்னும் நமது பகுதிகளில் மழை என்பது இருக்கிறது. இந்த மாத இறுதியில் தமிழ்நாட்டை நோக்கி சக்கரம் ஒன்று வருகிறது. இந்த சக்கரத்தின் வீரியம் என்ன? இந்த சக்கரத்துக்கு பெயர் வைக்கப்படுகிறதா? என்பதை கூற நாம் இன்னும் 10 முதல் 12 நாட்கள் கணிக்க வேண்டி உள்ளது” என்று கூறியுள்ளார்.

Readmore: ஐயப்ப பக்தர்களே!. 24 மணி நேர தகவல் மையம்!. தொலைபேசி எண்களும் அறிவிப்பு!. தமிழக அரசு புதிய ஏற்பாடு!