ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000 என்ற தகவல் வெளியான நிலையில், அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தகுதி உடையவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என விளக்கம் அளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். அப்போது, 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்‌ தெரிவித்திருந்ததாக தகவல் வெளியானது. இந்தநிலையில், அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000 என்ற தகவல் வெளியான நிலையில், அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தகுதி உடையவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க அனைவரின் விண்ணப்பங்களையும் பரிசீலித்து தகுதி உடையவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும். அந்த விண்ணப்பத்திற்கு தகுதி இல்லாதவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை கிடையாது என கூறியுள்ளார். மேலும் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், பொது துறை நிறுவனங்கள், ஓய்வூதியர்கள், நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்,சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள் என இவர்களுக்கெல்லாம் மகளிர் உரிமை தொகை கிடையாது என அரசு அறிவித்து இருந்தது.

இப்போது மீண்டும் கலைஞர் மகளிர் உரிமை தொகை விரிவுபடுத்த காரணம் உள்ளாட்சி தேர்தல் முன்பு திமுக அரசு மற்ற கட்சிகளை விட முன்கூட்டியே தனது வேலைகளை தொடங்கிவிட்டது என பலராலும் கூறப்படுகிறது. இந்த மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க சரியான ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும், இல்லையென்றால் நிராகரிக்கப்படும். எனவே சரியான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் புதிதாக ரேஷன் கார்டு பெறுபவர்களும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Readmore: நெருங்கும் பொங்கல் பண்டிகை!. இலவச வேட்டி, சேலை திட்டம்!. இந்த தேதி வரை தான் டைம்!. அமைச்சர் வெளியிட்ட அப்டேட்!