உடலில் தாதுக்கள் அதிகப்படியாக சேரும் போது சிறுநீரகத்தில் கல் படிந்து, சிறுநீரக கற்களாக மாறுகிறது. எனவே இந்த பிரச்சனை உள்ளவர்கள் திராட்சை, பாதாம், முந்திரி, பிஸ்தா, வேர்க்கடலை போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். அதேபோல் இனிப்பு பண்டங்கள், சர்க்கரைவள்ளி கிழங்கு உள்ளிட்ட உணவுகளையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் அதிக அளவு புரத சத்து இருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

வாழ்நாளில் 15% மக்கள் ஒரு சில நேரங்களில் இந்த பிரச்சனையை சந்திக்கின்றனர். பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்களுக்கு அதிகளவு ஏற்படுகிறது என்ற நிலை இருந்தது. ஆனால் காலப்போக்கில் இந்த நிலை குறுகி கொண்டே வருகிறது. அதன்படி, பெண்களுக்கும் இன்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் அதிகரிப்பு, சிறுநீரக பிரச்னைகளை உருவாக்க காரணமாக அமைகிறது. மேலும் 78 சதவீதம் பேருக்கு தானாகவோ (அ) அறுவை சிகிச்சை இல்லாமலேயே மருத்துவ சிகிச்சையின் மூலமாக சிறுநீரக கற்கள் வெளியேறுகிறது.

சிறுநீரக கல் என்பது ஒரு கடினமான தாதுப்பொருட்களின் கூட்டு (mineral deposit). இவை சிறுநீரகத்தின் வெளியேயோ அல்லது சிறுநீர் பைக்குள்ளேயோ நிகழ்கிறது. இவை ஆரம்ப காலத்தில் ஒரு சிறிய படிமமாகவோ, அதாவது மைக்ரோ கிரிஸ்டல் வடிவத்தில் தான் தொடங்குகிறது. பிறகு சிறு சிறு படிகங்கள் ஒன்று சேர்ந்து பல படிமங்களாக சில மாதங்களில் அல்லது ஆண்டுகளின் பெரிய கற்களாக உருவெடுக்கிறது. பொதுவாக உணவுப்பொருட்கள், தண்ணீர் ஆகியவை கால்சியம், பாஸ்பரஸ், ஆக்ஸலேட், யூரிக் அமிலம் மற்றும் சிஸ்டின் போன்ற தாதுப்பொருட்களை உள்ளடக்கியதாக உள்ளது. இவைதான் சிறுநீரக கற்கள் உருவாக காரணமாக அமைகிறது.

மேற்கூறியபடி, கற்கள் ஏற்படாமல் இருக்கதான், சிட்ரேட், பைரோபாஸ்பேட், வெளிமம் போன்ற படிக தடிப்பான்களின் பங்கு என்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவை சிறுநீரகத்தில் படிகங்கள் ஒன்றிணைவதை தடுக்கிறது. ஆனால், இவற்றின் அளவு குறையும் போதோ அல்லது முற்றிலும் இல்லாமல் போகும்போதோதான் சிறுநீரக கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அசையும் போது முதுகுப்பகுதியில் வழி, முதுகுப்பகுதியில் தொடங்கி முன் அடிவயிறு வரை வலி பரவும், வாந்தி, சிறுநீரில் ரத்தம் வறுதல், சிறுநீர் கழித்தலில் எரிச்சல், சில சமயங்களில் சிறுநீர் வராமலே போகலாம்.

Readmore: மனைவி கயல்விழிக்கு இந்த விஷயம் தெரியாது..!! நீ சொல்லிடாத..!! சத்தியம் வாங்கிய சீமான்..!! அம்பலடுத்திய விஜயலட்சுமி..!!