அதிக அளவில் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தினால் உங்களுக்கு வருமான வரித்துறை நோட்டிஸ் அனுப்பும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களை வருமான வரித்துறை கண்காணிக்கும். குறிப்பிட்ட வரம்பை மீறி செலவு செய்யும் பட்சத்தில் வருமான வரித்துறை உங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது. நிதி தொடர்பான மோசடிகளை தவிர்த்து, பணம் பதுக்கி வைப்பதை கண்டறிய வருமானவரித்துறை தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல எந்த ஒரு வங்கியோ அல்லது நிதி நிறுவனமோ தங்கள் வங்கியில் ஒருவர் கிரெடிட் கார்டு பெற்று அதிக அளவிலான பரிவர்த்தனையை செய்திருந்தால் உடனடியாக வங்கிகள் வருமான வரித்துறையிடம் தெரிவிக்க வேண்டும்.

இந்தப் பதிவில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஒருவர் செய்யக்கூடாத பரிவர்த்தனைகள் குறித்து பார்ப்போம்.வெளிநாட்டு பயணத்திற்கு அதிக செலவு செய்தல்: 1 வருடத்தில் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக வெளிநாட்டிற்கு பயணம் செய்வதற்காக செலவு செய்தால் அந்த விவரங்கள் வருமானவரித்துறைக்கு தெரியப்படுத்தப்படும்கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி அதிக செலவு: கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஒரு வருடத்தில் ரூ.2 லட்சத்திற்கு மேல் செலவு செய்திருந்தாலும் வருமான வரித்துறை உங்களை கண்காணிக்கும்.பில் பேமெண்ட்: கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ரூ.1 லட்சத்திற்கு மேல் பில் செலுத்தி இருந்தாலும் வருமான வரித் துறை உங்கள் மீது ஒரு கண் வைத்திருக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குகளில் அதிக முதலீடு: ஒரு வருடத்தில் மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குகள் மற்றும் பத்திரங்களில் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக முதலீடு செய்திருந்தாலும் வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம்.ரூ.30 லட்சத்திற்கும் அதிகமான ரியல் எஸ்டேட் முதலீடு: ரியல் எஸ்டேட்டில் ரூ.30 லட்சத்திற்கும் அதிகமான சொத்துக்களை வாங்கி இருந்தாலும், இந்த தகவல் தானாகவே வருமான வரித்துறையை சென்றடையும்.அதிக தொகையை டெபாசிட் செய்தல்: வங்கி கணக்கில் வழக்கத்திற்கு மாறாக அதிக தொகையை டெபாசிட் செய்வதும் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும்.

முன்பு கூறியது போல் எந்த ஒரு அதிக அளவிலான பரிவர்த்தனையை செய்தாலும் வங்கிகள் வருமானவரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும். அதேபோல ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கத்தை டெபாசிட் செய்யும் பட்சத்தில் உங்களுக்கும் நோட்டீஸ் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.பிசினஸ் செய்ய பயன்படுத்தப்படும் முதலீடு: வணிகத்திற்காக செய்யப்படும் பரிவர்த்தனையும் வருமானவரித்துறை கண்காணிக்கும். ரூ. 50,000-த்திற்கு மேல் நீங்கள் செய்யும் எந்த ஒரு முதலீட்டுக்கும் வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். எனவே வரம்பை மீறி செலவு செய்யும் பட்சத்தில் வருமானவரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம்.

Readmore: மழை காலத்தில் இதையெல்லாம் செய்யாதீர்கள்!. மின்சார வாரியம் எச்சரிக்கை!. உதவி எண்கள் அறிவிப்பு!.