தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து செய்த சமந்தா, தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். அதோடு ‘மயோசிட்டிஸ்’ என்ற நோய்க்கான சிகிச்சையிலும் ஈடுபட்டு வருபவர், தற்போது ‘சிட்டாடல்’ வெப் தொடரில் நடிக்கிறார்.
இந்நிலையில் இந்த தொடரின் புரமோஷன் நிகழ்ச்சியில் சமந்தா கூறும்போது, அம்மாவாக வேண்டும் என்ற கனவு தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு, ஒரு பெண் தாயாவது ஒரு அழகான அனுபவம். அதை நான் எதிர்நோக்கி இருக்கிறேன். பெரும்பாலான பெண்கள் வயதை பற்றி கவலைப்படுகிறார்கள். என்னை பொறுத்தவரை குழந்தை பெற்றெடுக்க வயது ஒரு தடையில்லை. எப்போது வேண்டுமானாலும் ஒரு பெண் தாயாகலாம் என்று தெரிவித்துள்ளார் சமந்தா.
ஹனி பன்னியில் நடித்த குழந்தையுடன் பழகியது, என் சொந்த குழந்தையுடன் பழகுவது போலவே உணர்ந்தேன். நான் இப்போது என் வாழ்க்கையில் அடைந்திருக்கும் இடத்துக்காக மிகவும் மகிழ்கிறேன். நான் எதில் கவனம் செலுத்த வேண்டும், எது எனக்கு முக்கியம் என்பதெல்லாம் எனக்கு இப்போது தெளிவாக தெரியும். அதனால், இப்போது இருக்கும் இந்த நிலையை அடைந்ததற்கு உண்மையில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்தார்.
Readmore: வேலைக்கு சேர்ந்த 3 நாளில் பணி பெண் செய்த செயல்..! 6 லட்சம் அபேஷ்…!!