நீலாக்குடி திருவாரூர் அடுத்த தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் விடுதியில் வழங்கப்படும் உணவில் புழு இருப்பதாக மாணவ மாணவிகள் வீடியோ ஓன்று வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து, சமையல் செய்யும் தனியார் நிறுவன ஒப்பந்ததாரரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டபோது காய்கறிகளில் இருக்கும் புழு பூசிகள் உணவில் வந்து இருக்கலாம் என விளக்கமளித்ததாக தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே மாணவர்களுக்கு வழங்கும் உணவில் தொடர்ந்து புழுக்கள் பூச்சிகள் தட்டான்கள் இருந்து வருவதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், தற்போது வரை புழுக்கள், பூச்சிகள் அடங்கிய உணவே மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் இன்று மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவிலும் புழுக்கள் பூச்சிகள் இருந்துள்ளது. உணவில் புழுக்கள் நெளியும் வீடியோ காட்சிகள் மாணவர்கள் வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், பல்கலைக்கழக விடுதியில் வழங்கப்படும் உணவில் புழு பூச்சி, தட்டான் உள்ளிட்டவைகள் இருப்பதாக மாணவ மாணவிகள் புகார் தெரிவித்திருந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் பேராசிரியர்கள் கொண்ட உயர்மட்ட குழு உணவகத்தின் சமையல் அறை மற்றும் குடிநீர் தொட்டியை நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதனையடுத்து, சமையல் செய்யும் தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Read More:9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு இ – மெயில் ஐடி!. அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த உத்தரவு!. பள்ளி கல்வித்துறை அதிரடி!