திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்த ஒத்த கருத்துள்ள அனைவரும் அதிமுக கூட்டணியில் இணையலாம். தேர்தல் நேரத்தில் அரசியல் சூழலுக்கு ஏற்றபடி எந்தக் கட்சி தலைமையிலான கூட்டணியில் யார் வருவார் என்பது தெரியவரும் என்று தெரிவித்தார்.

மேலும், தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை திமுக அரசு 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. மற்ற திட்டங்களுக்கு நிதி இல்லை என்று கூறும் முதல்வர் ஸ்டாலின், முட்டுகாட்டில் கலைஞர் பெயரில் பன்னாட்டு அரங்கம் அமைக்க மட்டும் நிதி எங்கிருந்து வந்தது? என கேள்வி எழுப்பினார்.

2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்காமல் தனித்தனியே போட்டியிட்டன. விரைவில் பாஜகவில் ஒன்றிய அளவில் நிர்வாக ரீதியாக மாற்றங்கள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி இவ்வாறு கூறியிருப்பது, 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலை தான் காரணம் என அப்போது சொல்லப்பட்ட நிலையில், அவருக்கு ஒன்றிய அளவில் முக்கிய பொறுப்பைக் கொடுத்துவிட்டு தமிழ்நாடு பாஜகவுக்கு புதிய தலைவரை அக்கட்சி அறிவிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம், வெகு விரைவில் அதிமுக ஒன்றிணையவிருக்கிறது என்பதும் அதன்பின் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் அறிவிப்பு வெளியாகும் என்பதும் புலனாகிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Read More : இரவில் குளித்தவுடனே தூங்குவதால் இந்த பிரச்சனைகள் எல்லாம் வருமாம்..!! சாப்பிட்ட பிறகு குளித்தால் உடல் எடை கூடுமாம்..!!