பள்ளிபாளையத்தில் 11ம் வகுப்பு மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து பெண் குழந்தை பிறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆர்.புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி. ஒட்டமெத்தை பகுதியில் வசித்து வரும் இவரது 16 வயது மகள் பள்ளிபாளையம் அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்தநிலையில், வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பள்ளி ஆசிரியர்கள் மாணவியை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பிணியாக இருப்பதும் பிரசவ வலி எடுத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. தகவலறிந்து மருத்துவமனைக்கு சென்ற பெற்றோர்கள் மாணவியின் நிலை கண்டு பதறினர்.

தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்த குழந்தை நல மருத்துவ அதிகாரிகள், அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று மாணவியின் பெற்றோர் ஆசிரியர் ஆகியோருடன் விசாரணை மேற்கொண்டனர். மேலும் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் இருந்து தாய் சேய் இருவரும் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மாணவியிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ராசிபுரத்தில் குடும்பத்துடன் வசித்த போது அவரது சித்தி மகனான ரங்கராஜ் என்பவர் மாணவியை தன்னை பாலியல் தொல்லை செய்ததாகவும், அதனால் மாணவி கருவுற்றிருக்கலாம் என்றும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த இளைஞரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

Readmore: அலர்ட்!. நவ.30ம் தேதிதான் கெடு!. இதை செய்யாவிட்டால் கேஸ் சிலிண்டர் இணைப்பு முடக்கப்படும்!