PM கிசான் திட்டம் இந்தியா முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளை இலக்காகக் கொண்டு, அவர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு 6,000 ரூபாயை 3 தவணைகளாக வழங்கப்படுகிறது. அதாவது 4 மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. இது நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 2 ஹெக்டேர் வரை மட்டுமே நிலம் வைத்திருக்க வேண்டும்.

சிறு, குறு விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதியுதவி பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை இடைத்தரகர்கள் உள்ளிட்ட எவ்வித இடையூறும் இல்லாமல் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. அண்மையில் இத்திட்டத்தின் 18வது தவணை வெளியிடப்பட்டது.

பிஎம் கிசான் திட்டத்திர்ன் கீழ் ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர், டிசம்பர்-மார்ச் மாதங்களில் ஒவ்வொரு தவணையிலும் ஏக்கருக்கு இரண்டாயிரம் வீதம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. பிஎம் கிசான் நிதியின் 18வது தவணை கடந்த அக்டோபர் 5 ஆம் ஆண்டும் 2024 அன்று விவசாயிகளின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது.

சமீபத்தில், பிரதமர் கிசானின் 19 வது தவணை குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது அரசு 19 வது தவணை நிதியை வெளியிட தயாராகி வருகிறது. அதன்படி பிப்ரவரி 2025 கடைசி வாரத்தில் 19 வது தவணை நிதி வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பி.எம்.கிசான் தொடர்பாக மற்றொரு குட் நியூஸ் ஓன்று வெளியாகியுள்ளது. அதன்படி 18 வது தவணையில் ரூ. 2 ஆயிரம் பெறாத விவசாயிகளுக்கு 19 வது தவணையுடன் சேர்த்து பணம் டெபாசிட் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தகுதியான விவசாயிகளின் வங்கி கணக்கில் 18 மற்றும் 19 வது தவணையையும் சேர்த்து மொத்தமாக ரூ. 4 ஆயிரம் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Readmore: நகை கடன் பெறுவதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!. சில டிப்ஸ் இதோ!