தங்கத்தின் விலை உயர்வால் தங்கக் கடன் வழங்கும் நிறுவனங்கள் சமீபத்தில் ஹேப்பியாக இருக்கின்றன. ஏனெனில் தங்கத்தின் மீதான நல்ல மதிப்பு காரணமாக, தங்கக் கடன் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, தற்போது தங்க நகைகளை வாங்கவும் விற்கவும் பல்வேறு வழிமுறைகள் வந்துவிட்டன.
தங்க நகை கடன் வாங்கும்போது மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம். அதன்படி, நீங்கள் தங்க நகை கடன் வாங்க போகிறீர்கள் என்றால், சில விஷயங்களை தெரிந்து கொண்டு கவனமுடன் வாங்குவது அவசியம். தங்க நகை மதிப்பீடு: உங்கள் நகைகளுக்கு ஏற்ற வகையில் தங்க நகை கடன்கள் வழங்கப்படுகிறதா என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். மேலும், நகை கடன் வாங்க செல்லும் போது அன்றைய ஆபரணத் தங்கம் எவ்வளவு விலையில் விற்பனை செய்யப்படுகிறதோ அந்த விலைக்கே உங்களுக்கு கடன் வழங்கப்படும்.
நகை கடன் மதிப்பு (LTV)-யை சரிபார்க்க வேண்டும். அதாவது, இது 80-90% வரை இருக்கலாம். உதாரணமாக, இப்போது உங்கள் தங்க டெபாசிட்டின் மதிப்பு ரூ. 1 லட்சம் என்றால், உங்களுக்கு 75% LTV வழங்கப்பட்டால், தங்க நகை கடன் மதிப்பு ரூ.75 ஆயிரமாக இருக்கும். தங்க நகை கடன்களை வாங்கும் போது பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வட்டி விகிதங்களை அறிந்து கொண்டு வாங்க வேண்டும்.
நீங்கள் கடன்களை பெறும் போது , உங்களுக்கு ஏற்ற கால வரையறையை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். மேலும் சரியான நேரத்தில் பணத்தை செலுத்தவில்லை என்றால், உங்கள் நகை ஏலத்திற்கு விடப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
Readmore: திருமா, வைகோவுக்கு ஜாக்பாட்!. முக்கிய பதவி வழங்கும் திமுக தலைமை!. தீவிர ஆலோசனையில் முதல்வர்!