ஆஸ்கர் விருதுக்கு வாழை, தங்கலான் உள்ளிட்ட 6 தமிழ் படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன .
திரையுலகில் உயரிய விருதுகளில் ஒன்றாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருதை வெல்வது வாழ்நாள் கெளரவமாகத் திரையுலகினர் கருதுகின்றனர். இந்நிலையில், நடப்பாண்டு ஆஸ்கர் விருதிற்கான ‘சிறந்த வெளிநாட்டுப் படங்கள் பிரிவு’ போட்டிக்கு அனுப்ப, இந்தியா சார்பில் மொத்தம் 29 படங்களைப் பரிசீலித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 6 தமிழ் படங்கள் பரிந்துரை செய்யப்பட்டன. விஜய் சேதுபதி நடித்த மகாராஜா, விக்ரம் நடித்த தங்கலான், சூரி நடித்த கொட்டுக்காளி, ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், வாழை, ஜமா ஆகிய படங்கள் ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியில் 12 படங்களும், தெலுங்கில் 6 படங்களும், மலையாளத்தில் 4 படங்களும், மராத்தியில் 3 படங்களும், ஒடியாவில் 1 படமும் உள்பட 29 படங்கள் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட உள்ளன. இவற்றில் லாபட்டா லேடிஸ், கல்கி 2898 ஏ.டி., ஆட்டம், ஆடு ஜீவிதம், ஆர்ட்டிகிள் 370, அனிமல் ஆகிய படங்களும் அடங்கும்.
Read More : ஒரு கிலோ 10 ரூபாய் தான்..!! மாடுகளுக்கு தீவனமாக மாறிய பீர்க்கங்காய்..!! விவசாயிகள் வேதனை..!!