ராசிபுரம் அருகே மயானத்தில் எரிந்த நிலையில் 6 மண்டை ஓடுகள் கண்டறியப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கோவிந்தம்பாளையத்தில் மூதாட்டி ஒருவர் இறந்த நிலையில், அவரை அடக்கம் செய்வதற்காக உறவினர் மயானத்திற்கு சென்றனர். அப்போது, அங்கு 6 மனித மண்டை ஓடுகள் வரிசையாக வைத்து எரிக்கப்பட்டிருந்தன. அதன் அருகே மனித எலும்புகள், அரிவாள், ஆணி, மாந்திரீகம் செய்யப்பட்ட பழங்கள் ஆகியவறை கிடந்ததால், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து, புதுசத்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சோதனை நடத்தினர். எரிக்கப்பட்ட மண்டை ஓடுகள் யாருடையது..? இது எங்கிருந்து கிடைக்கப்பட்டது..? மாந்திரீக பூஜை நடந்தது உண்மையா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : மச்சினிச்சி மீது வந்த விபரீத ஆசை..!! தடையாக இருந்த மனைவியை காரை ஏற்றிக் கொன்ற கணவன்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட் சம்பவம்..!!