நாட்டையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய குமாரபாளையத்தில் கொள்ளை கும்பல் பிடிபட்ட சம்பவம் குறித்த அவர்களின் வாக்குமூலம் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையர்கள், செப்.27 வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே போலீசாரால் பிடிபட்டனர். சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதிச் சென்ற கண்டெய்னர் லாரியை 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் போலீசார் துரத்திப் பிடித்தனர். அப்போது, கண்டெய்னரில் இருந்து கும்பல் கற்களை வீசி தாக்கியதால், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் ஒரு கொள்ளையன் சுட்டுக் கொல்லப்பட்டான். மற்றொரு கொள்ளையனை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர். 5 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், இரண்டு காவல்துறை அதிகாரிகளும் காயம் அடைந்தனர். இந்த கொள்ளை கும்பல் செயல் நாடு முழுவதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்தநிலையில், கொள்ளையடித்தது குறித்து அந்த கும்பல் அளித்த வாக்குமூலத்தில், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த நாங்கள் பணத்துக்காக நிறைய கஷ்டப்பட்டோம். இதற்காக கொள்ளை சம்பவத்தில் இறங்கினோம். அதன்படி, வங்கி ஏ.டி.எம்.,மில் கொள்ளை அடிப்பது என்று முடிவெடுத்தோம். இதற்காக கார் ஒன்றை வாங்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தோம். ஆனால், எங்களை போன்றே சில கும்பல் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, வட மாநிலத்தில் கொள்ளை கும்பலுக்குள் போட்டி நிலவியதால் நாங்கள் தென் மாநிலங்களை குறிவைத்தோம்.
70 பேர் வரை உள்ள இந்த கும்பல், முதலில் ஒரு ஏ.டி.எம்.மில் நுழைந்து கொள்ளை அடிக்க 10 நிமிடங்கள்தான் ஆகும். சிசிடிவி கேமராவை செயல்படாமல் செய்ய ‘ஸ்பிரே பெயின்ட்’ அடித்துவிடுவோம், பின்னர், காஸ் வெல்டிங்’ கருவியை வைத்து, ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, அதிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்வோம். அந்தந்த ஊருக்கு ஏற்றபடி கார் பதிவு எண்ணை மாற்றி விடுவோம். அதனால், உள்ளூர் கார் போலவே இருக்கும். யாருக்கும் சந்தேகம் வராது.
ஒரு ஊரில் கொள்ளையில் ஈடுபட்டால், அங்கே இருக்கும் மற்ற ஏ.டி.எம்., நோக்கி செல்ல மாட்டோம். 500 கி.மீ., தொலைவுக்கு சென்று, அங்கிருக்கும் ஏ.டி.எம்., மையத்தில் கொள்ளையடிப்போம். தமிழகத்துக்கு பின், கேரளாவுக்குச் சென்றோம். திருச்சூர் மாவட்டம் கோலழி, திருச்சூர் நகரம் சொரணுார் சாலையில் உள்ள ஏ.டி.எம்., திருச்சூருக்கு அருகில் உள்ள இருஞ்சாலக்குடி மாம்பரணம் பகுதியிலும் கொள்ளையடித்தோம். ஆனால் திருச்சூரில் தொடர் ஏடிஎம் கொள்ளைகள் நிகழ்ந்ததால் உஷாரான போலீசார் எங்களை பிடிக்க முயற்சித்தனர். இதையடுத்து, கண்டெய்னரில் தப்பித்து செல்வதை அறிந்த திருச்சூர் போலீசார், தமிழக போலீசாருக்கு தகவல் அளித்துவிட்டனர்.
Readmore: அமைச்சராகும் சேலம் ஆர்.ராஜேந்திரன்!. உதயநிதி உட்பட 4 பேர் இன்று பதவியேற்பு!. திமுகவில் பரபரப்பு!