புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு உகந்த மாதமாக உள்ளது. நடப்பாண்டிற்கான புரட்டாசி மாதம் கடந்த மாதம் 17ஆம் தேதி பிறந்தது. புரட்டாசி மாதம் வரும் 17ம் தேதியுடன் நிறைவடைகிறது. புரட்டாசி மாதத்தில் உள்ள ஒவ்வொரு நாளும் சிறப்பு வாய்ந்த நாள் என்றாலும், புரட்டாசி சனிக்கிழமை மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.

இந்த புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை இன்று கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாத சனிக்கிழமையுடன் விஜயதசமி கொண்டாட்டமும் சேர்ந்து வருவதால் பக்தர்கள் இந்த கடைசி சனிக்கிழமையை தனிச்சிறப்பு வாய்ந்ததாக கருதுகின்றனர். இதன் காரணமாக, காலை முதலே கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் இந்த சனிக்கிழமை நாலாம் கிழமை என்பதாலும், சேலம் மாவட்டம் எடப்பாடி மேட்டுத்தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெறது.

விழாவின் முக்கிய நிகழ்வான தெப்பத்தில் பெருமாள் இறங்கும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. பெருமாளை அலங்கரித்து தெப்பக்குளத்தில் வைத்து அழைத்துச் செல்லப்பட்டதை திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Readmore: 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?. தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்..!!