வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க நவம்பர் மாதத்தில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியை தகுதி பெறும் தேதியாக கொண்டு 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளராக தங்களுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், நவம்பர் 9, 10, 23, 24 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெற உள்ளது. தேவையான அளவு படிவங்களை வைத்திருக்க அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சேர்ப்பது எப்படி..?

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சேர்க்க 2 வழிகள் உள்ளன. அதாவது, தேர்தல் ஆணையத்தின் தேசிய வாக்காளர் சேவை இணையதளம் அல்லது செயலியைப் பயன்படுத்தி ஆன்லைனில் பதிவு செய்யலாம். அப்படி இல்லை என்றால், உங்கள் பகுதியில் நடக்கும் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்கள் அல்லது உங்கள் பகுதியின் தேர்தல் அதிகாரிகளிடம் நேரடியாகச் சென்று அதற்கான விண்ணப்பத்தை வழங்கலாம்.

Read More : சேலம் உட்பட 14 அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதிய முதல்வர் நியமனம்!. தமிழக அரசு அதிரடி உத்தரவு!