நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டை திருச்சியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் கொள்கைகளை கொண்டு செல்வதற்காக பிரம்மாண்டமாக மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், திருச்சி மாவட்டம் பொன்மலை ஜி-கார்னர் திடலில் செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெற இருப்பதாக கூறும் மாநாட்டில், கட்சியின் கொடியை அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சியின் 3 விதமான கொடிகள் தற்போது தயார் நிலையில் உள்ளது. நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் கொடிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், 3 கொடிகளில் எந்தக் கொடியை கட்சிக்கு பயன்படுத்துவது என்பது பற்றி விஜய் தான் முடிவெடுப்பார் என தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கட்சி நிர்வாகிகளுக்கான பதவிகள் மற்றும் பொறுப்புகள் குறித்தும் இந்த மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Read More : கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்..? தேவூர் போலீசார் தகவல்..!!