கொங்கணாபுரம் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தனியார் கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே செங்கான்வளவு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் நவீன் (வயது 19). இவர், குமாரபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில், தேர்வு எழுதுவதற்கான இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது, அதே கல்லூரியில் படிக்கும் அவரது நண்பர்கள் ஜீவானந்தம், மைக்கேல்ராஜ் ஆகியோரும் நவீனுடன் ஒரே பைக்கில் சென்றுள்ளனர்.

இவர்கள், கொங்கணாபுரம் – சங்ககிரி பிரதான சாலையில் வெட்டுக்காடு பகுதியில் சென்றபோது முன்னால் சென்ற லாரியை மாணவர்கள் முந்திச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது, லாரியின் பக்கவாட்டில் மோதி 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நவீன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த மாணவனின் உடலை மீட்ட கொங்கணாபுரம் போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read More : அங்கும் இங்குமாக பறந்த தண்ணீர் பாட்டில்கள்’..!! ’அடித்துக் கொண்ட திமுக கவுன்சிலர்கள்’..!! பெண் என்றும் பாராமல் இப்படியா..? பாய்ந்தது நடவடிக்கை