* கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியத்திற்கு அடிக்கல் நாட்டி, முக்கிய அறிவிப்பையும் இன்று வெளியிடுகிறார் முதலமைச்சர் முக.ஸ்டாலின்.

* மதுரை டங்ஸ்டன் திட்டம் ரத்து தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம்.

* டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக அறிவிப்பு வரவில்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என மேலூர் ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம் அறிவிப்பு.

* மத்திய பட்ஜெட்டில் 25% வருமான வரி விகிதம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல். ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி விலக்கு அளிக்கவும் திட்டம்.

* அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக எம்.பி. கதிர் ஆனந்திடம் அதிகாரிகள் கிடுக்கிப் பிடி விசாரணை. 2019 தேர்தல் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், முறையாக பதில் அளித்துள்ளதாகவும் கதிர் ஆனந்த் விளக்கம்.

* தீ விபத்து வதந்தியால் புஷ்பக் ரயிலில் இருந்து இறங்கி ஓடிய பயணிகள் மற்றொரு தண்டவாளத்தில் வந்த விரைவு ரயில் மோதி உயிரிழந்த சோகம். 12 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்தார் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ்.

* 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளுக்கு இரண்டு மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

* காசாவில் நிவாரண உதவிகளை பெற அலைமோதிய பாலஸ்தீனியர்கள். பொருட்களை கொண்டுச் செல்லும் வாகனங்களின் பின்னால் ஓடும் அவலம்.

* இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி. பந்துவீச்சில் தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகனாக தேர்வு.

Read More :

ஒல்லியாக இருப்பவர்களிடையே மாரடைப்பு அபாயம் அதிகரிப்பு!. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!.

உங்க குழந்தைகள் அதிகளவு சுகர் எடுத்துக்கொள்கிறார்களா?. எப்படி கட்டுப்படுத்துவது?. இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!.