ஒரே வாலிபரை 2 மாணவிகள் காதலித்து வந்த நிலையில், இருவரும் தலைமுடியை பிடித்து சண்டை போட்டுக் கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் பள்ளி ஒன்று செயல்பட்டு வரும் நிலையில், இந்தப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வரும் 2 மாணவிகள் ஒரே வாலிபரை காதலித்து வந்துள்ளனர். இது குறித்து முதலில் இருவருக்கும் தெரியாத நிலையில், ஒரு கட்டத்தில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஒரே வாலிபரை விரும்புவதை அறிந்த 2 மாணவிகளும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

வீடியோவை பார்க்க.. https://twitter.com/i/status/1874621895666274428

ஒருவரை ஒருவர் முடியை பிடித்து இழுத்து சண்டை போட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்தபோதும், ஒருவர் ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போலீசாரும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Read More : உயிருக்கு போராடிய பெண்ணை சோளக்காட்டிற்குள் இழுத்துச் சென்று வன்கொடுமை..!! கையெடுத்து கும்பிட்டும் விடவில்லை..!! குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்..!!