கள்ளக்காதலியை வலுக்கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்துக் கொண்டதால், அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் சந்திரபுரம் அருகே ஒண்ணுவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மனைவி கவிதா (வயது 28) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்த நிலையில், குழந்தைகள் எதுவும் இல்லை. சக்தி பெங்களூருவில் தங்கி கட்டிட வேலை செய்து வரும் நிலையில், மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வந்துச் செல்வதாக கூறப்படுகிறது. இதனால், மனைவி கவிதா மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.
மனைவி கவிதா, அதேபகுதியில் உள்ள மகளிர் குழுவினரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதனால், கடந்த 11ஆம் தேதி கடன் தொகையை வசூலிக்க மகளிர் குழுவினர் வந்துள்ளனர். அப்போது, கவிதா வீட்டின் கதவுகள் திறந்து கிடந்த நிலையில், அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, கவிதா படுக்கையறையில் அரை நிர்வாண நிலையில் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். கவிதாவின் செல்போனை கைப்பற்றி அவருடன் பேசியவர்களின் விவரங்களை சேகரித்தனர். அதில் 2 எண்களில் இருந்து அடிக்கடி ஃபோன் வந்துள்ளது. விசாரணையில், அதேபகுதியை சேர்ந்த குமரேசன் (26), விக்னேஷ் (25) ஆகிய இருவரின் செல்போனில் இருந்து தான் அடிக்கடி கவிதாவுக்கு ஃபோன் வந்துள்ளது. இதையடுத்து, அவர்களை பிடித்து விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
கொலையான கவிதாவுக்கும், குமரேசனுக்கும் கடந்த 7 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. கணவர் மாதம் ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வருவதால், இதனை சாதகமாக்கிக் கொண்டு இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதற்கிடையே, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குமரேசன் சிங்கப்பூர் சென்றுவிட்டார். அப்போது, விக்னேஷூடன் கவிதாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி ஜாலியாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு குமரேசன் ஊர் திரும்பியுள்ளார்.
அப்போது தனது கள்ளக்காதலிக்கும், விக்னேஷூக்கும் தொடர்பு இருந்த தகவல் அறிந்து குமரேசன் ஆத்திரமடைந்துள்ளார். இதையடுத்து, கடந்த 10ஆம் தேதி கவிதாவின் வீட்டிற்கு குமரேசன் சென்றுள்ளார். அங்கு, கவிதாவை உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். ஆனால், அவர் மறுத்துவிட்டார். அப்போது கவிதாவிடம், ”உனக்கும் விக்னேஷூக்கும் தொடர்பு இருப்பது தெரியும். இதனால்தான் என்னை வேண்டாம் என்று சொல்கிறாய்” என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், கவிதாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் மயங்கி விழுந்த கவிதாவுடன் வலுக்கட்டாயமாக உடலுறவு வைத்துள்ளார் குமரேசன். பின்னர், அவர் அங்கிருந்து சென்ற நிலையில், சிறிது நேரம் கழித்து நள்ளிரவு விக்னேஷ் வந்துள்ளார். அவரும் உல்லாசமாக இருக்க கவிதாவை அழைத்துள்ளார். ஆனால், தனக்கு உடல்நலம் சரியில்லை எனக்கூறி மறுத்தார். இதனை ஏற்க மறுத்த விக்னேசும் சந்தியாவை தாக்கிவிட்டு உல்லாசமாக இருந்துள்ளார். இதில் மூச்சுத்திணறி சந்தியா உயிரிழந்தார். இதையடுத்து குமரேசன், விக்னேஷ் ஆகிய இருவரும் எதுவும் நடக்காதது போல் தலைமறைவாகிவிட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் குமரேசன், விக்னேஷ் ஆகியோர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.