ஒருதலை காதல் விவகாரத்தில் 16 வயது சிறுமியை கடத்திய தந்தை மற்றும் இரண்டு மகன்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே ஆரியூர் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரை, திருமலை சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சுபாஷின் காதலை சிறுமி ஏற்க மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சுபாஷ், தனது தம்பி சுசில்போஸ் மற்றும் தந்தை காத்தவராயன் ஆகியோரின் உதவியுடன் சிறுமியை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்றுள்ளார்.

இதற்கிடையே, சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில், சுபாஷ் உள்ளிட்ட 3 பேர் சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியை காதலித்த சுபாஷ் மற்றும் அவரது தந்தை உள்ளிட்ட 3 பேரும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், கடத்தப்பட்ட சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Read More : சீமான் அந்தர்பல்டி!. நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவோர் ஸ்லீப்பர் செல்கள்; நாங்கள் தான் அனுப்பி வைக்கிறோம்’!