எலிக்காய்ச்சல் என்பது சுழல் வடிவ நுண்ணுயிரியான லெப்டோஸ் பைரா எனப்படும் பாக்டீரியாவில் இருந்து நாய்கள், பன்றிகள், கால்நடைகள் மூலமாகவும், குறிப்பாக எலிகளின் மூலமாகவும் மனிதர்களுக்கு பரவுகிறது. ஆண்டுதோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். லெப்டோஸ்பைரோசிஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான திட்டத்தை குஜராத், கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, அந்தமான் – நிகோபர் மாநிலங்களில் மத்திய அரசு தொடங்கியது.

இந்த வகை தொற்றை உறுதிப்படுத்த ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டில் 1,046 பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. 2022-ல் 2,612 ஆகவும், கடந்த ஆண்டில் 3,002 ஆகவும் இருந்தது. நடப்பாண்டில் இதுவரை 1,369 பேருக்கு எலிக்காய்ச்சல் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More : ஆடிப்பெருக்கு..!! பவானி கூடுதுறை ஆற்றில் இறங்கி புனித நீராட பக்தர்களுக்கு தடை..!! கோயில் நிர்வாகம் சார்பில் மாற்று ஏற்பாடு..!!