குமாரபாளையத்தில் வாகனத் தணிக்கையின்போது, விற்பனைக் கொண்டு செல்லப்பட்ட 131 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார் ஒரு பெண் உட்பட 3 பேரை கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் பகுதியில் போதைப்பொருள் விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்பைடியில், காவல் ஆய்வாளர் தவமணி தலைமையிலான போலீசார் நேற்று காலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, டி.வி.எஸ்., எக்ஸல்’ டூவீலரில் வந்த, அபெக்ஸ் காலனியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் காரில் வந்த ரவீந்திரன் என்பவரிடம் 125 கிலோ போதை பொருட்களை வாங்கி அவரது டூ வீலரில் வைத்தார். போலீசார் அப்போது இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதேபோல், மாரபாளையம் கம்பர் தெரு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் போதைப்பொருள் விற்பனை செய்த சாந்தா என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 6.300 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இரு வழக்குகளில் மொத்தம், 131 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் என போலீசார் தெரிவித்தனர்.