தென்மேற்கு பருவமழை காரணமாக வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், கே.எஸ்.ஆர் அணை, கபினி அணை உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளன. தமிழ்நாட்டிற்கு ஒரு கன அடி தண்ணீர்கூட தர முடியாது என பிடிவாதம் பிடித்த கர்நாடக அரசு, தற்போது உபரிநீரை எக்கச்சக்கமாக திறந்து விட்டுள்ளது.
அதன்படி, கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 90,000 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 20,000 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read More : அனல் பறக்கும் கூட்டணி..!! மாஸ் காட்டிய தனுஷ்..!! ”ராயன்” திரைப்படம் எப்படி இருக்கு..?