நாடு முழுவதும் உள்ள பல்வேறு அஞ்சல் வட்டங்களில் ஏராளமான காலியிடங்கள் இருக்கின்றன. அவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கையை இந்திய தபால் துறை எடுத்துள்ளது. அந்த வகையில், வேலையில்லாதவர்களுக்கு இந்திய தபால் துறை நற்செய்தியை வழங்கியுள்ளது. 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் காலியாகவுள்ள 21,413 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். நாடு முழுவதும் பிப்ரவரி 10 முதல் ஆட்சேர்ப்பு செயல்முறை தொடங்கியுள்ளது.
பணியின் பெயர் :
Gramin Dak Sevak (GDS)
Branch Postmaster (BPM)
Assistant Branch Postmaster (ABPM)
காலியிடங்கள் : 21,413
கல்வித்தகுதி : அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
BPM – ரூ.12,000 முதல் ரூ.29,380
ABPM / Dak Sevak – ரூ.10,000 முதல் ரூ.24,470
தேர்வு செய்யப்படும் முறை :
தகுதியின் அடிப்படையில் (Merit List) தேர்வு
விண்ணப்பிப்பது எப்படி..?
* விண்ணப்பதாரர்கள் indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால், 06.03.2025 முதல் 08.03.2025ஆம் தேதிக்குள் திருத்திக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.03.2025
கூடுதல் விவரங்களுக்கு : https://www.careerpower.in/blog/wp-content/uploads/2025/02/11103946/India-Post-GDS-Recruitment-2025-Notification-PDF.pdf