சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கூடக்கல் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி அன்பழகன். இவருக்கு சொந்தமான கரும்புத் தோட்டத்தில், சுமார் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதை அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் பார்த்து, அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சலிட்டனர். பின்னர், அந்த மலைப்பாம்பு காவிரிக் கரை பகுதியை ஒட்டியுள்ள வேறொரு விவசாயியின் தோட்டத்திற்குள் புகுந்தது.

இதையடுத்து, அப்பகுதி விவசாயிகள் உடனே எடப்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த வீரர்கள், விவசாய தோட்டத்தில் புதருக்குள் பதுங்கியிருந்த மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர், அது வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மலைப்பாம்பு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

Read More : விநாயகர் சதுர்த்தி..!! கட்டாயம் இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்..!! சேலம் ஆட்சியர் உத்தரவு..!!